அதியமான் கோட்டையில் காளியம்மன் கோவில் தேரோட்டம்
- 150 கிராம மக்களுக்கு காளியம்மன் திருவீதி உலா 11 நாட்கள் சென்று திரும்பி கோவிலுக்கு வந்த பிறகு மகா தேரோட்டம் நடைபெறும்.
- காளியம்மன் கோவில் மகா தேரோட்டம் 300 ஆண்டுகளைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை பகுதியில் கால பைரவர் கோவில் சென்றாய பெருமாள் கோவில் உள்ளிட்ட புகழ்பெற்ற கோவில்கள் அமைந்துள்ள பகுதியில் அருகிலேயே சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த காளியம்மன் கோவிலில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் தொடங்கி சித்திரை மாதம் வரை சுமார் 15 நாட்கள் தேர்த்திருவிழா மற்றும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
தேர் திருவிழாவிற்கு முன்னதாக காளியம்மனை குலதெய்வம் ஆகும். கண் கண்ட தெய்வமாகவும் வணங்க க்கூடிய 150 கிராம மக்களுக்கு காளியம்மன் திருவீதி உலா 11 நாட்கள் சென்று திரும்பி கோவிலுக்கு வந்த பிறகு மகா தேரோட்டம் நடைபெறும்.
இந்த திருவிழாவின் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் வாரச்சந்தையும் மாட்டுச்சந்தை உள்ளிட்டவை நடைபெறும் என்பதால் சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் பொதுமக்கள் பக்தர்கள் என அனைவரும் திருநள்ளாக திருவிழாவிலும் வாரச்சந்தையிலும் மாட்டு சந்தையிலும் கலந்து கொள்வார்கள்.
அதேபோல் நேற்று காளியம்மன் கோவில் மகா தேரோட்டம் 300 ஆண்டுகளைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. (கொரோனா பேரிடர் காலத்தில் மட்டும் இரண்டு ஆண்டுகள் தேர் திருவிழா நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது).
தேர் திருவிழா நடைபெறும் 15 நாட்களும் கோவில் வளாகத்தின் அருகிலேயே காலை முதல் மாலை வரை கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் பசியாற கூழ் அமுது தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கூழ் அமுது 150 கிராம மக்களின் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த பகுதியில் மட்டும் தேர் திருவிழாவில் விற்பனையாகும் தேங்காய் மிட்டாய் சுவைப்பதற்காகவே பல்வேறு பகுதியில் இருந்தும் பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர்.
நேற்று தேர்த்திருவிழா தேரோட்டத்தின் போது சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டதால் அதியமான் கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.