உள்ளூர் செய்திகள்

காசிமேடு கடற்கரையை நவீனப்படுத்தும் பணி தொடக்கம்

Published On 2023-08-10 16:29 IST   |   Update On 2023-08-10 16:29:00 IST
  • கலாசாரம் மற்றும் உணவை மேம்படுத்தும் வகையிலான சிறப்பம்சங்கள் இடம்பெற உள்ளது.
  • அமைக்கப்படும் உணவுக் கடைகள் மூலம் மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

சென்னை:

சென்னை என்றதுமே நினைவுக்கு வருவது அழகான கடற்கரைகள். மத்திய சென்னையில் மெரினா கடற்கரை, தென் சென்னையில் திருவான்மியூர், பெசன்ட் நகர் போன்ற கடற்கரைகள் மக்களின் பொழுதுபோக்கிற்காக இருக்கும் நிலையில், வட சென்னை மக்கள் காசிமேடு கடற்கரையை பொழுதுபோக்கு தலமாக பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது இந்த கடற்கரை பார்வதி நகரில் இருந்து காசிமேடு வரை 5 கி.மீ. நீளத்துக்கு தமிழ்நாடு அரசால் மேம்படுத்தப்பட உள்ளது. சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கீழ் இங்கு பல்வேறு பணிகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு அதற்கான வேலைகளை தொடங்கி உள்ளது.

அதன்படி பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் பகுதிகள், நீரூற்றுகள் கொண்ட பிளாசா, உணவு அரங்கம், விளையாட்டுப் பகுதி, கழிப்பறைகள் மற்றும் காசிமேடு மீன் என்று அழைக்கப்படும் சிற்பம் போன்றவை மூலம் அழ காக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காசிமேடு மீன் மார்க்கெட் மற்றும் எண்ணூர் விரைவுச்சாலை மற்றும் வடக்கு டெர்மினல் சாலை சந்திப்பு வரையிலான 1.5 கி.மீ தூரத்தை அழகாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், காசிமேடு கடற்கரை அழகுப்படுத்தப்பட உள்ளதால் பொதுமக்கள் வருகை அதிகரிக்கும். அதன் மூலம் அங்கு அமைக்கப்படும் உணவுக் கடைகள் மூலம் மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இது தொடர்பாக நடைபெற்ற பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தொலை நோக்குப் பயிற்சிக் கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா பங்கேற்றனர்.

இதுபற்றி அதிகாரிகள் கூறு கையில், காசிமேடு கடற்கரையில், வட சென்னையின் பூர்வகுடி மக்களான மீனவர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் கலாசாரம் மற்றும் உணவை மேம்படுத்தும் வகையிலான சிறப்பம் சங்கள் இடம்பெற உள்ளது. இங்கு உருவாக்கப்படும் பிளாசாவில் ஸ்டால்கள் அமைக்க மீனவர்கள் ஊக்கு விக்கப்படுவார்கள்.

இதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும். இந்த பிளாசாவின் நடுவில் ஒரு மீன் சிற்பம் அமைக்கப்படும். பிளாசாவில் கேலரி போன்ற இருக்கைகள் அமைக்கப்பட்டு, அங்கு தினமும் மாலையில் இசை நிகழ்ச்சி, தெரு நாடகங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது என்றனர்.

Tags:    

Similar News