உள்ளூர் செய்திகள்

ஆலங்குளம் அருகே பீடித்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-15 14:29 IST   |   Update On 2023-10-15 14:29:00 IST
  • புதுப்பட்டியில் உள்ள தனியார் பீடி நிறுனத்தின் கீழ் சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றனர்.
  • பீடிக்கடை முன்பு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தினர்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியில் உள்ள தனியார் பீடி நிறுனத்தின் கீழ் சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொழி லாளர்களுக்கு விடுமுறை ஊதியம், வருங்கால வைப்பு நிதி, போனஸ் மற்றும் வார ஊதியத்தை சரியாக செலுத்தவில்லையாம். இதுகுறித்து பலமுறை கேட்டும் நிர்வாகம் தரப்பில் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து அந்த பீடிக்கடை முன்பு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புதுப்பட்டி ஊராட்சி தலைவர் பால் விநாயகம் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிலாளர்கள் மற்றும் பீடி நிறுவன அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது என அப்போது முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News