தமிழ்நாடு

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அப்பாவு

Published On 2025-03-17 12:45 IST   |   Update On 2025-03-17 12:45:00 IST
  • முதலில் நடந்த குரல் வாக்கெடுப்பில் அ.தி.மு.க. கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.
  • அ.தி.மு.க. கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக 154 பேர் வாக்களித்த நிலையில் தீர்மானம் தோல்வி அடைந்தது.

சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அவையை துணை சபாநாயகர் நடத்தினார்.

சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானத்தை முன்மொழிந்தார். எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

சட்டசபை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர். மக்கள் பிரச்சனைகளை அவையில் பேச அனுமதி அளிக்காமல் சபாநாயகர் அப்பாவு பாரபட்சம் காட்டுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார்.

சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

முதலில் நடந்த குரல் வாக்கெடுப்பில் அ.தி.மு.க. கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

குரல் வாக்கெடுப்பை தொடர்ந்து டிவிசன் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

டிவிஷன் முறையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெற்றபோது பேரவையின் நுழைவுவாயில் கதவுகள் மூடப்பட்டன.

பேரவையில் நடந்த குரல் வாக்கெடுப்பிலும் டிவிஷன் முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் அ.தி.மு.க. கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 63 பேர் ஆதரவாக வாக்களித்தனர். அ.தி.மு.க. கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக 154 பேர் வாக்களித்த நிலையில் தீர்மானம் தோல்வி அடைந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அப்பாவு அமர்ந்தார்.

சபாநாயகர் இருக்கையில் மீண்டும் அப்பாவு அமர்ந்தபோது சட்டசபை உறுப்பினர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News