உள்ளூர் செய்திகள்
பா.ஜ.க. ஆட்சியின் நலத்திட்டங்கள்: பயனாளர்களின் தபால்களை மத்திய அரசுக்கு அனுப்பிய நிர்வாகிகள்
- பாஜக மாநில மீனவர் பிரிவு செயலாளர் நா.பிரேம்குமார் தலைமையில் தபால்களை அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மண்டல் தலைவர் முனுசாமி, மண்டல் பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை:
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 9 ஆண்டுகால ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மூலம் தமிழகத்தில் பயனடைந்த பயனாளர்கள் தபால் மூலம் நன்றி தெரிவித்தனர். பாஜக மாநில மீனவர் பிரிவு செயலாளர் நா.பிரேம்குமார் தலைமையில் சென்னை நடுக்குப்பம் பகுதி பொதுமக்கள் மற்றும் பயனாளர்களிடம் பெறப்பட்ட தபால்களை அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மண்டல் தலைவர் முனுசாமி, மண்டல் பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வட்டத் தலைவர் இளையராஜா, மீனவரணி மாவட்ட தலைவர் ஜெகதீஷ், சந்தோஷ், கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.