உள்ளூர் செய்திகள்

உடல் உறுப்பு தானம் வழங்க ஒப்புதல் படிவம் வழங்கிய ஊழியர்கள்.

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் ரத்த தானம் மற்றும் உடல் தான முகாம்

Published On 2023-07-07 13:47 IST   |   Update On 2023-07-07 13:47:00 IST
  • தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்குவதற்காக ரத்ததான மற்றும் உடல் உறுப்பு தான முகாம் நடைபெற்றது.
  • ஊழியர்கள் உள்பட 38 பேர்கள் ரத்ததானம் செய்தார்கள். மேலும் 26 பேர் உடல் உறுப்புகள் தானம் செய்ய ஒப்புதல் அளித்து படிவங்கள் வழங்கினர்.

தேனி:

தேனியில் உள்ள ஸ்ரீ குமரன் தங்கமாளிகை நகைக்கடை மற்றும் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவ மனை இணைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்குவதற்காக ரத்ததான மற்றும் உடல் உறுப்பு தான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு ஸ்ரீ குமரன் தங்கமாளிகை மேலாளர் நாகராஜ் குப்தா தலைமை தாங்கினார். தேனி நகராட்சி சேர்மன் ரேணுப்ரியா பாலமுருகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். ஊழியர்கள் உள்பட 38 பேர்கள் ரத்ததானம் செய்தார்கள். மேலும் 26 பேர் உடல் உறுப்புகள் தானம் செய்ய ஒப்புதல் அளித்து படிவங்கள் வழங்கினர்.

உடல் உறுப்புகள் தான படிவங்களை தேனி நகராட்சி சேர்மன் ரேணுப்ரியா பாலமுருகன் பெற்றுக்கொண்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி டாக்டா பிரியாவிடம் வழங்கினார். மேலும் ரத்தம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கினார்.

வெளிச்சம் அறக்க ட்டளை தலைவர் சிதம்பரம், மனிதநேய காப்பகம் பால்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குமரன் தங்கமாளிகை மேலாளர் நாகராஜ் குப்தா, விளம்பர மேலாளர் வசந்த், மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர்கள் சலீம், ஷேக் பரீத் மற்றும் தீபன் ஆகியோர் செய்திரு ந்தனர்.

Tags:    

Similar News