உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் சினிமாவில் இருந்து வந்து பெரிய அரசியல் தலைவராக வெற்றிபெற முடியாது: குருமூர்த்தி

Published On 2023-06-28 07:34 IST   |   Update On 2023-06-28 10:52:00 IST
  • ஒரு கூட்டத்தை அமைப்பாக மாற்ற முடியாது. கூட்டத்தை கட்சியாக மாற்ற முடியாது
  • விஜயகாந்த் தவிடுபொடியாக்கவில்லை. அதுதானே பிரச்சினை

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இனிமேல் சினிமாவில் இருந்து வந்து பெரிய அரசியல் தலைவராக முடியாது என்று நான் நினைக்கிறேன். அது தப்பாகக் கூட இருக்கலாம். அது நடக்கும் என தோன்றவில்லை. ஏனென்றால், எம்.ஜி.ஆர். ஒரு கட்சியை அமைக்க காரணமே, திமுக-வில் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் 30 வருடங்கள் இருந்தது.

திமுக உடன் வேலை செய்து அரசியல் அவர்களுக்கு அத்துப்படி. திமுக-விற்குள்ளே அதிமுக இருந்தது. அதிமுக-வை ஆரம்பிக்கும்போது அதிமுக ரெடியாக இருந்தது.

ரசிகர்களை வைத்து கூட்டம்போட்டு... இதே பிரச்சினைதான் ரஜினிக்கு வந்தது. ஒரு கூட்டத்தை அமைப்பாக மாற்ற முடியாது. கூட்டத்தை கட்சியாக மாற்ற முடியாது.

விஜயும், ரஜினியும்.... யார் யாரால பண்ண முடியும், பண்ண முடியாது என்பதை தள்ளி வைத்துவிட்டு, ஒரு கும்பலை கட்சியாக மாற்றுவது கஷ்டம் என்பதை எனது அனுபவத்தை வைத்து புரிந்து கொண்டேன். விஜயகாந்த் தவிடுபொடியாக்கவில்லை. அதுதானே பிரச்சினை. ஏன் எம்.ஜி.ஆர். மாதிரி விஜயகாந்தால் ஆக முடியவில்லை?.

இவ்வாறு குருமூர்த்தி தெரிவித்தார்.

சமீபத்தில் விஜய் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளை அழைத்து பரிசுகள் வழங்கினார். அவர் அரசியலுக்கு வருவார் என்று பேசப்பட்டு வரும் நிலையில் துக்ளக் ஆசிரியர் இவ்வாறு பேசியுள்ளார்.

Similar News