உள்ளூர் செய்திகள்
கர்ப்பிணியை அடித்ததாக 4 பேர் மீது வழக்கு
- கடந்த 15-ம் தேதி, கன்னங்குறிச்சி அய்யந்திரு மாளிகையில் உள்ள சத்யாவின் தாய் வீட்டுக்கு வந்தனர்.
- கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சக்திவேல் உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
ஆத்தூர் பைத்தூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி சத்யா (வயது 30), கர்ப்பிணியான இவரும், பன்னீர்செல்வமும் கடந்த 15-ம் தேதி, கன்னங்குறிச்சி அய்யந்திரு மாளிகையில் உள்ள சத்யாவின் தாய் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் வெளியே பன்னீர்செல்வம் நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசுவது, தன்னை குறித்து தான் என நினைத்த பக்கத்து வீட்டை சேர்ந்த சக்திவேல், அவரது மனைவி சித்ரா, மகள் கோகிலா, மருமகன் சிரஞ்சீவி ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். மேலும் அவரை தாக்கியதாகவும் தெரிகிறது. அப்போது அதனை தடுக்க வந்த சத்யாவையும் தாக்கி ஆபாசமாக பேசியுள்ளனர்.
இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சக்திவேல் உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.