உள்ளூர் செய்திகள்

விற்பனைக்காக குவித்து வைக்கபட்டுள்ள மீன்கள்.

ஆடு, கோழி இறைச்சிகளை விட விலைகுறைவால் பொம்மிடி மீன் சந்தையில் விற்பனை அமோகம்

Published On 2022-09-11 15:05 IST   |   Update On 2022-09-11 15:05:00 IST
  • கடல் மீன்கள் 200 முதல் 700 வரையிலும் கிடைப்பதாலும் பொதுமக்கள் மீன் சாப்பிடுவதில் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்
  • பொம்மிடி,கடத்தூர், தருமபுரி, அரூர் ஆகிய மாவட்டங்களில் கிராமந்தோறும் சாலை ஓரங்களில் மீன் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டத்தில், தொப்பையாறு அணை , வாணியாறு அணை, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி அணை, பாரூர் ஏரி, அரசம்பட்டி ஏரி என பல்வேறு அணைக்கட்டுகளில் மீன் வளர்ப்பு அதிக அளவில் நடைபெற்று வருவதால் அதிக அளவிலான மீன்கள் கிராமம் மற்றும் நகரம் தோறும் விற்பனைக்கு வருவதை காணமுடிகிறது.

ஆட்டு இறைச்சி கிலோ ரூபாய் 600 முதல் 700 வரையிலும், மாட்டு இறைச்சி 300 முதல் 350 வரையிலும், பிராய்லர் கோழி 200 முதல் 250 வரையிலும், நாட்டுக்கோழி 400 முதல் 450 வரையிலும், விற்கப்படுகிறது. இதை விட குறைந்த விலையில் மீன்கள் இருப்பதால் பொதுமக்கள் மீன் சாப்பிடுவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

குறைந்த விலையிலான ஜிலேபி மீன் 120 ரூபாய்க்கும், பாறை, கட்லா, லோகு, கெளுத்தி போன்ற மீன்கள் 180 ரூபாய்க்கும், கடல் மீன்கள் 200 முதல் 700 வரையிலும் கிடைப்பதாலும் பொதுமக்கள் மீன் சாப்பிடுவதில் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்

பொம்மிடி,கடத்தூர், தருமபுரி, அரூர் ஆகிய மாவட்டங்களில் கிராமந்தோறும் சாலை ஓரங்களில் மீன் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இறைச்சி கடைகளை விட சமீப காலங்களாக மீன் கடைகளில் அதிக கூட்டம் காணப்படுகிறது.இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெருமளவு மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியதை காண முடிகிறது.

Tags:    

Similar News