உள்ளூர் செய்திகள்

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க சென்னை மாநகராட்சி உத்தரவு

Published On 2022-11-05 19:45 IST   |   Update On 2022-11-05 19:45:00 IST
  • புதிதாக மழைநீர் வடிகால்கள் உருவாக்கப்பட்ட இடங்களில் வடிகட்டு தொட்டிகளை அமைக்க உத்தரவு
  • திடக்கழிவுகளை அகற்றும் வகையில் தீவிர தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டுகோள்

சென்னை:

சென்னையில் பகல் நேரங்களில் தற்போது மழை இல்லாத காரணத்தினால், மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. குறிப்பாக, புதிதாக மழைநீர் வடிகால்கள் உருவாக்கப்பட்ட இடங்களில் வடிகட்டு தொட்டிகளை உடனடியாக அமைக்கப்பட வேண்டும் எனவும், அதற்கு தேவையான இணைப்பு குழாய்கள் பொருத்தவேண்டும் அல்லது தற்காலிகமாக துளையிட வேண்டும் எனவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதுமட்டுமல்லாமல், மழையின் காரணமாக சாலைகளில் ஏற்பட்டுள்ள சிறு பள்ளங்களை உடனடியாக சீர்செய்யவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது. தெருக்களில் தேங்கியுள்ள திடக்கழிவுகளை அகற்றும் வகையில் தீவிர தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நடைபெற்றுவந்த மழைநீர் வடிகால் பணிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஒருசில இடங்களில் முடிக்கப்படாமல் இருக்கக்கூடிய மழைநீர் வடிகால் இணைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென ஒப்பந்ததாரர்களுக்கு, சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

Similar News