உள்ளூர் செய்திகள்

குறுக்குத்துறை முருகன் கோவில், பாளை திரிபுராந்தீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

Published On 2023-04-24 09:04 GMT   |   Update On 2023-04-24 09:04 GMT
  • 30-ந் தேதி காலையில் உருகுசட்டமும், சண்முகார்ச்சனையும் நடக்கிறது.
  • திரிபுராந்தீஸ்வரர் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரம் அருகில் பூஜைகள் நடைபெற்றது.

நெல்லை:

நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பாலாலயம்

காலை 6 மணிக்கு கொடி யேற்றம் நடைபெற்றது. கும்பாபிஷேக பணிக்காக கோபுரம், பாலாலயம் செய்ய ப்பட்டிருப்பதால் இன்றைய விழா உள்திரு விழாவாக நடைபெற்றது. தொடர்ந்து 11 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

வருகிற 30-ந் தேதி காலையில் உருகுசட்டமும், சண்முகார்ச்சனையும் நடக்கிறது. அடுத்த மாதம் 4-ந் தேதி காலை தீர்த்தவாரி நடைபெற உள்ளது. பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் சுவாமி வீதி உலா, தேரோட்டம் நடைபெறாது. அனைத்து நிகழ்ச்சிகளும் உள்விழா வாகவே நடைபெறுகிறது.

திரிபுராந்தீஸ்வரர் கோவில்

பாளை கோமதி அம்மாள் சமேத திரிபுராந்தீஸ்வரர் கோவில் மிகவும் பழமையானது. இந்த கோவிலில் சித்திரை பிரமோற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி -அம்மாள் விஸ்வரூபம் காலை சந்தி நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து கொடிப்பட்டம் ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, தொடர்ந்து திரிபுராந்தீஸ்வரர் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரம் அருகில் சுவாமி அம்மாள் எழுந்தருள பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கொடியேற்றப்பட்டு கொடிமரத்திற்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பிறகு கொடி மரத்திற்கும், சுவாமி-அம்பாளுக்கும், தீபா ராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று முதல் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை பிரமோற்சவத்தில் 7-ம் நாள் 63 நாயன்மார் வீதி உலாவும், 9-ம் நாள் தேரோட்டமும் நடை பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்த ர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News