தியாகதுருகத்தில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
- தியாகதுருகத்தில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
- சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரியிடம் பேசி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் பேரூராட் சிக்கு உட்பட்ட பகுதியில் ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தியாகதுருகம் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறி, தியாகதுருகம் கடைவீதி பேருந்து நிறுத்தத்தில் சுமார் 10- க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமை யிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரியிடம் பேசி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதனை ஏற்று சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் 5 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில் ரிஷிவந்தியம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சுந்தரேசபுரம் பகுதியில் குடிநீர் செல்லும் இரும்பு பைப் லைனில் பழுது ஏற்பட்டதாகவும். அதனை சரி செய்யும் பணி நிறை வடைந்துள்ளது. நாளை முதல் தியாகதுருகம் பகுதி யில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என கூறி னார்.