உள்ளூர் செய்திகள்

தூய்மை பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்ட போது எடுத்தபடம்.

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் தர்ணா

Published On 2023-03-20 14:33 IST   |   Update On 2023-03-20 14:33:00 IST
  • 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • 750- க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் மாநகராட்சி பகுதியில் பணியாற்றி வருகிறார்கள்.

நெல்லை:

நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கங்களின் தலைவர் மோகன் தலைமை யில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இன்று நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சங்க தலைவர் மோகன் கூறியதாவது:-

நெல்லை மாநகராட்சி பகுதியில் 750- க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் 15 வருடங்களுக்கு மேலாக சுய உதவிக்குழுக்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மாநகராட்சி மூலம் நேரடியாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது ஒப்பந்ததாரர்கள் மூலம் சுயஉதவிக்குழு தூய்மை பணியாளர்களை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அப்படி செய்தால் அவர்களுக்கு முழுமையான ஊதியம் கிடைக்காது. எனவே தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News