உள்ளூர் செய்திகள்
சர்தார்
கடையநல்லூர் அருகே மீன் லாரி மோதி தேங்காய் வியாபாரி பலி
- தேங்காய் வியாபாரி சர்தார் சொக்கம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
- லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட சர்தார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி காந்தாரி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சர்தார்(வயது 65). தேங்காய் வியாபாரி.
இவர் சொக்கம்பட்டி அருகே உள்ள பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கேரளாவில் இருந்து தூத்துக்குடி மீன் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அந்த லாரி எதிர்பாராதவிதமாக சர்தார் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சர்தார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சொக்கம்பட்டி போலீசார் சர்தாரின் உடலை மீட்டு மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சகாயம் பிரபாகரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.