உள்ளூர் செய்திகள்

கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார்.

கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2022-09-11 10:36 IST   |   Update On 2022-09-11 10:36:00 IST
  • அரசு ஆஸ்பத்திரியில மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.
  • ரேசன் கடையில் அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேனி:

கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்தகத்தில் வழங்கப்படும் மருந்து,

மாத்திரைகளின் இருப்பு, அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு பயன்படுத்தக்கூடிய உபகரணங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, ரேசன்கடையில் விற்பனை முனைய இயந்திரத்தில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News