உள்ளூர் செய்திகள்
ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம்- காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் அடிக்கல் நாட்டினார்
- ஒரு சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும் என்ற ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
- பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு.
நாகர்கோவில் பெருவிளை பகுதியில் ஒரு சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும் என்ற ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டினர்.
இதுதொடர்பாக விஜய் வசந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.