உள்ளூர் செய்திகள்
தமிழகத்தில் மேலும் 737 பேருக்கு கொரோனா - சென்னையில் 383 பேருக்கு பாதிப்பு
- கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல மாவட்டங்களில் முககவசம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
- கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 322 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் புதிதாக 737 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் புதிதாக 383 பேருக்கும், செங்கல்பட்டில் 128 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4366 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 322- பேர் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 700 ஐ தாண்டியுள்ளதால் பல மாவட்ட நிர்வாகங்கள் முககவசம் கட்டாயம் என அறிவித்துள்ளன.