உள்ளூர் செய்திகள்
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா- ஒரே நாளில் 2,533 பேருக்கு பாதிப்பு
- கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 13,319- ஆக உயர்வு உயர்வு.
- கொரோனாவில் இருந்து இன்று 1,372 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது. மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டு வரும் தினசரி பாதிப்பு தகவலின்படி நேற்று 2,385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இன்று அதன் எண்ணிக்கை 2,500 தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் புதிதாக 2,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 13,319- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 1,372 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் இன்று 1,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.