உள்ளூர் செய்திகள்

பயிறு வகைகள், உளுந்து விதை இருப்பு வைப்பு - வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

Published On 2023-02-18 10:58 IST   |   Update On 2023-02-18 10:58:00 IST
  • முதல் தேர்வாக உளுந்து பயிறு சாகுபடி செய்து அதிக லாபம் அடைய விவசாயிகள் முன் வர வேண்டும்.
  • உளுந்து பயிறு விதைகளை வாங்கி பெற்று சாகுபடி செய்து பயனடைய வேண்டும்.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு 2-ம் போக எண்ணெய் வித்து பயிர் சாகுபடிக்கு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கடந்த மாதம் தொடக்கம் முதல் கால்வாயில் முறை பாசன நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் முத்தூர் நகர, சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் முடிந்தவுடன் போதிய பாசன வசதி உள்ள கிராமங்களில் குறைந்த வயதுடைய மற்றும் பாசன நீர் குறைவான தேவை உடைய பயிறு வகை சாகுபடியில் மண் வளத்தை அதிகரிப்பதுடன் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதல் தேர்வாக உளுந்து பயிறு சாகுபடி செய்து அதிக லாபம் அடைய விவசாயிகள் முன் வர வேண்டும்.

இதற்கு உயர் விளைச்சல் தரும் உளுந்து பயிறு விதைகள் முத்தூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் தற்போது தயாராக இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. எனவே இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகள் நேரில் வந்து உளுந்து பயிறு விதைகளை வாங்கி பெற்று சாகுபடி செய்து பயனடைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News