தியாகதுருகம் அருகே மழை நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்: மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் ஆய்வு
- நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தது.
- விவசாயிகள் ஆக்கிரமித்து ள்ளதாகவும் இதனால் மழை நீர் வெளியேறாமல் விவசாய நிலங்களில் தேங்கி நிற்பதால் நெற்பயிர்கள் சேதமடைந்தன
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே நாகலூர் கிராமத்தில் சுமார் 200-ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் தலைமையில் ஒன்றிய குழு சேர்மன் தாமோதரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, நெடுஞ்செழியன் ஆகியோர் சேதமடைந்த நெற்பயிர்களை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பயிர் செய்யப்பட்டுள்ள பரப்பளவு, நெல் ரகம் மற்றும் சேத விபரம் குறித்து புவனேஸ்வரி பெருமாள் கேட்டறிந்தார். அப்போது ஏரியிலிருந்து நீர் வெளியேறும் வடிகால் வாய்க்காலை ஒரு சில விவசாயிகள் ஆக்கிரமித்து ள்ளதாகவும் இதனால் மழை நீர் வெளியேறாமல் விவசாய நிலங்களில் தேங்கி நிற்பதால் நெற்பயிர்கள் சேதமடைந்தன எனவும் விவசாயிகள் கூறினர்.
சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் விவசாயி களிடம் கூறினார். அப்போது மாவட்ட பிரதிநிதி மடம் பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலரும் உடன் இருந்தனர்.