உள்ளூர் செய்திகள்
மூத்த குடிமக்களுக்கு ரெயில் பயண சலுகையை திரும்ப வழங்ககோரி ஆர்ப்பாட்டம்
- ரெயில்வேயில் மூத்தகுடி மக்களுக்கு நிறுத்தப்பட்ட பயண சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும்.
- தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தாம்பரம்:
ரெயில்வேயில் மூத்தகுடி மக்களுக்கு நிறுத்தப்பட்ட பயண சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாம்பரம் ரெயில் நிலையத்தில் ஓய்வூதியதாரர்கள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் நிலைய மேலாளரிடம் வழங்கினர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.