உள்ளூர் செய்திகள்

வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஸ்பர்ஷ் தொழுநோய் குறித்து துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வு

Published On 2023-02-11 13:07 IST   |   Update On 2023-02-11 13:07:00 IST
  • பள்ளி தலைமையாசிரியர் நித்தையன் தலைமையில் பேரணி நடைபெற்றது.
  • மாணவ- மாணவிகளின் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (ஜூனியர் ரெட்கிராஸ்) இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் சார்பில் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் நித்தையன் தலை மையில், வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வசிதம்பரம் முன்னிலையில், மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இடையூர் சங்கேந்தி, மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் கதிரேசன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் ஆசிரியர்கள் ஆரோக்கிய அந்தோணி ராஜா, அன்பரசு, முருகேசன், முத்து லெட்சுமி, இந்திரா, அமிர்தம், பென்சிராணி, வனிதா மற்றும் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News