உள்ளூர் செய்திகள்

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் தருமபுரி கடைவீதிகளில் குவியும் மக்கள் கூட்டம் -போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தவிப்பு

Published On 2022-10-16 13:46 IST   |   Update On 2022-10-16 13:46:00 IST
  • பொதுமக்கள் குவிந்துள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
  • போக்குவரத்தை சீர் செய்ய முடியாமல் போக்குவரத்து காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

தருமபுரி,

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், தருமபுரியில் புத்தாடைகளை வாங்க பொதுமக்கள் குவிந்துள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், கடை வீதிகள் நிறைந்த நகரின் பல பகுதியில் கடுமையான வா

கன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வெளியூர்களிலிருந்து இங்கு வந்து தங்கி வேலை பார்ப்பவர்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சில நாட்கள் முன்பாகவே செல்லத் தொடங்குவார்கள். இதனால், புத்தாடைகள் வாங்க மக்கள் கடை விதிகளுக்கு குடும்பத்தினருடன் படையெடுத்து வருகின்றனர்.

இதனால், முக்கிய பகுதிகளில் இப்போதே கூட்டம் குவியத் தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக ஜவுளிக் கடைகள் மட்டுமின்றி பட்டாசுகள் வாங்க ,இனிப்பு வகைகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் குவிந்து வருவதால் விடுமுறை நாட்களான நேற்றும்,இன்றும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

தீபாவளி விற்பனை காரணமாக, தருமபுரி கடைவீதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. முக்கியமான சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் போக்குவரத்து போலீசாருடன், சட்டம் ஒழுங்கு போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்தை சீர் செய்ய முடியாமல் போக்குவரத்து காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

Tags:    

Similar News