சல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு எலெக்ட்ரீசியன் தற்கொலை
- கோபால்ராஜா சல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டு விட்டார்.
- கோபால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த குள்ளபாளையம், பாலமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால்ராஜா (30). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
கோபால் ராஜாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவருக்கு வயிற்று வலியும் இருந்து வந்துள்ளது. இதனால் அவரது பெற்றோர் கோபால் ராஜாவை குடிக்க வேண்டாம் என கண்டித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த கோபால் ராஜா குடிப்பழக்கத்தை மறக்க முடியாமல் சல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டு விட்டார். வீட்டில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கோபால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.