- கோவை செல்லும் சாலையில் ஓட்டல் வைத்துள்ளார்.
- பெஞ்சில் உட்கார்ந்திருந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (42). இவர் அதே பகுதியில் கோவை செல்லும் சாலையில் ஓட்டல் வைத்துள்ளார். இவரது மனைவி இமாக்குலேட் கீதா (49). இவர் திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்களாகிறது. குழந்தைகள் இல்லை. ஆனந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனது மனைவி பணிபுரிந்து வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், இமாக்குலேட் கீதா திருச்சியில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்றிருந்தார். ஆனந்த் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.
நேற்று காலை சுமார் 8 மணியளவில் வீட்டில், பெஞ்சில் உட்கார்ந்திருந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அவினாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.