உள்ளூர் செய்திகள்

ரங்கசாமி-மல்லிகார்ஜுனா கோவில் தெப்ப திருவிழா

Published On 2022-10-07 12:57 IST   |   Update On 2022-10-07 12:57:00 IST
  • தாளவாடி அருகே உள்ள திகனாரை கிராமத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ரங்கசாமி-மல்லிகார்ஜுனா கோவில் உள்ளது.
  • இந்த ஆண்டும் திருவிழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.காலை சாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.

தாளவாடி:

தாளவாடி அருகே உள்ள திகனாரை கிராமத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ரங்கசாமி-மல்லிகார்ஜுனா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தெப்ப திருவிழா நடைபெறும்.

அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.காலை சாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. பின்னர் மதியம் 12 மணியளவில் சாமி வீதி உலா நடந்தது.

ரங்சாமி, மல்லி கார்ஜுனா சாமிகளின் உற்சவ சிலைகள் மலர்களால் அலங்கரிக்கபட்ட சப்பரத்தில் வைக்கபட்டு திகனாரை கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக சப்பரம் ஊர்வலமாக கொண்டு செல்லபட்டு தெப்ப திருவிழாவுக்காக அங்கு உள்ள குளத்தை அடைந்தது.

பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. குளத்தின் நடுபகுதிக்கு சப்பரத்தை பக்தர்கள் சுமந்து சென்றனர். அங்கு குளத்து தண்ணீரில் தேர்வடிவில் இருந்த தெப்பத்தில் சப்பரம் வைக்கபட்டு குளத்தை 3 முறை சுற்றி வந்தது.

குளத்தின் கரையில் பக்தர்கள் நின்று தெப்ப திருவிழாவை கொண்டாடினர். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து குளத்தின் மறுகரைக்கு சப்பரம் ஊர்வலமாக எடுத்து வரபட்டது. பின்னர் பக்தர்கள் சாமிக்கு பூக்கள் வைத்து தரிசனம் செய்தனர்.

தெப்பதிருவிழாவிற்கு தாளவாடி, மெட்டல்வாடி, எரகனள்ளி, தொட்ட காஜனூர் ஆகிய கிராமத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News