ஸ்பின்னிங் மில் உரிமையாளர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை
- சண்முகம் சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷ மாத்திரையை திண்று வாந்தி எடுத்துள்ளார்.
- இது குறித்து அவரது மனைவி கேட்டபோது தான் விஷ மாத்திரை சாப்பிட்டதாக கூறியுள்ளார்.
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி பெருமா பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (49). இவர் ஸ்பின்னிங் மில் மற்றும் கோழிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் உள்ளனர்.
இந்நிலையில் சண்முகம் விபத்தில் அடிபட்டு கால் வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த சண்முகம் சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷ மாத்திரையை (சல்பாஸ்) திண்று வாந்தி எடுத்துள்ளார்.
இது குறித்து அவரது மனைவி கேட்டபோது தான் விஷ மாத்திரை சாப்பிட்டதாக கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி உறவினர்கள் உதவியுடன் சண்முகத்தை சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சண்முகம் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சண்முகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.