உள்ளூர் செய்திகள்

கொள்ளையன் சுந்தரவேல்.

பண்ருட்டி பகுதியில் கைவரிசை காட்டிய பிரபல மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது

Published On 2022-09-06 12:16 IST   |   Update On 2022-09-06 12:16:00 IST
  • பண்ருட்டி பகுதியில் கைவரிசை காட்டிய பிரபல மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
  • நன்னி குப்பம் வழியாக சென்றபோது பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தகவல் கொடுத்தனர்.

கடலூர்:

பண்ருட்டி அருகே நன்னிகுப்பம் கிராமத்தில் புதிய மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்த ஆசாமியை பொதுமக்கள் மடக்கி பிடித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையில் பண்ருட்டி அருகே மாளிகை மேடு எஸ்.கே.பாளையத்தைசேர்ந்த சுந்தர வேல்(வயது21) மோட்டார்சைக்கிள்திருடன் என்று தெரியவந்தது. இவன் பண்ருட்டி உள்ளிட்ட பலஇடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது இவனை தொடர்ந்து விசாரித்த போது கடந்த மாதம்  4-ந் தேதி சேந்தநாடு அருகே நின்றிருந்த இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டுஅதனை ரெட்டிபாளையம் கிரா மத்தில் மாணிக்கம் என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தினான்.

பின்னர் மாணிக்கத்திற்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் வாகனத்தை திருடிக் கொண்டு நன்னி குப்பம் வழியாக சென்றபோது பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தகவல்கொடுத்தனர். அதன் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார்வழக்குப்பதிவு செய்து அவனிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றி சுந்தரவேலை கைது செய்தனர்.

Tags:    

Similar News