சின்னசேலம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
- சில வருடங்களாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார் .
- வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 45) விவசாய தொழில் செய்து வருகிறார் இவர் சில வருடங்களாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார் இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி அன்று காலை 11 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சீனிவாசனின் மகன் மணி வீட்டிற்கு வந்து பார்த்தபோது சீனிவாசன் வாயில் நுரை தள்ளியவாறு கடந்துள்ளார் . உடனே அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து மணி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.