உள்ளூர் செய்திகள்

அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பதையும், பக்தர்கள் தீ மிதிப்பதையும் படத்தில் காணலாம்.

கஞ்சமலை சித்தர் கோவிலில் காளியம்மனுக்கு தீ மிதி திருவிழா

Published On 2023-05-04 14:37 IST   |   Update On 2023-05-04 14:37:00 IST
  • கஞ்சமலை சித்தர் கோவில் சிறப்பு திருவிழா நடந்து வருகிறது.
  • இதை முன்னிட்டு கடந்த 30-ந்தேதி விநாயகர் ஊர்வலம் நடந்தது.

காகாபாளையம்:

இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தர் கோவில் சிறப்பு திருவிழா நடந்து வருகிறது. இதை முன்னிட்டு கடந்த 30-ந்தேதி விநாயகர் ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் பொங்கல் வைப வம், ராகிகளி படையல் மற்றும் உருளுதண்டம் நடந்தது.

நேற்று மதியம் காளியம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.மாலையில் தீ மிதித்தல் நடந்தது. பக்தர்கள் அதில் கலந்து கொண்டு தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து அன்னதானம், நீர் மோர் வழங்குதல் நடந்தது. பின்னர் நல்லணம்பட்டியை சேர்ந்த ஒருவருக்கு சித்தர்போல் அலங்காரம் செய்தனர். பின் அவரை ஒருவர் மாட்டுகயிறால் மூன்று முறை அடித்தார்.

பின் அவரிடம் குருக்கள் எப்போது மழை வரும் என்று கேட்டதற்கு இன்னும் 3 நாட்களில் மழை வரும் என கூறினார். ஆண்டு தோறும் இவ்வாறு அருள்வாக்கு கேட்பதும், அவர் கூறியது போல் சுற்று வட்டாரத்தில் மழை பெய்வது வழக்கமான ஒன்றாகும்.

Tags:    

Similar News