உள்ளூர் செய்திகள்

தீ மிதித்த பக்தர்களை படத்தில் காணலாம்.

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா

Published On 2023-03-08 15:39 IST   |   Update On 2023-03-08 15:39:00 IST
  • திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற சின்ன ஓம் காளியம்மன் கோவில் மாசிக் குண்டம் திரு விழா கடந்த மாதம் 24-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.
  • குண்டம் இறங்கி தீமிதிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

திருச்செங்கோடு:

திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற சின்ன ஓம் காளியம்மன் கோவில் மாசிக் குண்டம் திரு விழா கடந்த மாதம் 24-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது. குண்டம் இறங்க பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தினசரி அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்து வழிபாடு செய்து வந்தனர்.

மேலும் அலகு குத்தியும் அக்னிசட்டி ஏந்தியும் வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலையில் தொடங்கியது. குண்டம் இறங்கி தீமிதிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

60 அடி நீளமுள்ள குண்டத்தில் தகதகவன கொளுந்து விட்ட தீக்குள் கோவில் பூசாரி முதலில் தீமிதிக்க தொடர்ந்து பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக குண்டம் இறங்கினார்கள். முன்னதாக ஓம் காளிபூசாரி குண்டம் இறங்கிய போது பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என பக்தி பரவ சத்தில் கோஷமிட்டனர்.

பெண்கள் தங்கள் குழந்தைகளை கைகளில் தூக்கியபடி குண்டத்தில் இறங்கி நடந்தனர் இந்த குண்டம் இறங்கும் நிகழ்வில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து அம்மனுக்கு தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினார்கள். தொடர்ந்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.

Tags:    

Similar News