மீனவர்கள் வலையில் சிக்கிய நண்டுகள்.
நண்டுகள் அதிகளவில் கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி
- சீதோசன நிலை காரணமாக நண்டுகள் வரத்து அதிகரிப்பு.
- நல்ல லாபம் கிடைப்பதால் மீன்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம் கடற்பகுதியை ஒட்டிய கொள்ளுக்காடு பகுதியில் இருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகு மூலமாக கடலுக்குள் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிராம்பட்டினம் முதல் மல்லிப்பட்டினம் வரையிலான கடல் பகுதி சேற்று பகுதி என்பதால் இப்பகுதிகளில் கிடைக்கும் கொடுவா மீன், இறால், நண்டு சுவை மிகுந்ததாக இருக்கும்.
இதனால் இப்பகுதியில் கிடைக்கும் மீன் இறால் நண்டுகளுக்கு மவுசு அதிகம்.
இந்த நிலையில் கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள நல்ல சீதோசன நிலை காரணமாக நண்டுகள் வரத்து அதிகரிக்கப்பட்டு, அதிக அளவில் கிடைக்கின்றன.
இந்த நண்டுகளை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் நேரடியாக கொள்முதல் செய்து வருவதால் நல்ல லாபம் கிடைப்பதாக மீன்வர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இப்பகுதி யில் தினந்தோறும் பல லட்சகணக்கான ரூபாய்க்கு வர்த்தககம் நடைபெறும் நிலையில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமில்லாததால் கொள்முதல் செய்ய வரும் நிறுவனங்கள், பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
எனவே கொள்ளுக்காடு ஊராட்சி நிர்வாகம் முறையான சாலை தெருவிளக்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.