உள்ளூர் செய்திகள்
மாணவிகளுக்கு வழங்க தயார் நிலையில் விலையில்லா சைக்கிள்கள்
- இலவச சைக்கிள் வழங்குவதற்காக தயார் நிலையில் உள்ளது.
- தலைமை ஆசிரியர் தெரேசால், கணேஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் களை வழங்கும் நிகழ்ச்சியினை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
இதனையொட்டி தருமபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 முடித்த 698 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்காக தயார் நிலையில் உள்ளது. இதனைதலைமை ஆசிரியர் தெரேசால், கணேஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.