உள்ளூர் செய்திகள்

பரமத்தி அரசு பள்ளியில் முன்னாள் எம்.எல்.ஏ மணி நினைவாக நடந்த மருத்துவ முகாமில் தங்கமணி எம்.எல்.ஏ கலந்து கொண்ட போது எடுத்த படம். 

பரமத்தி அரசு பள்ளியில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

Published On 2022-12-28 09:22 GMT   |   Update On 2022-12-28 09:22 GMT
  • பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து கபிலர்மலை தொகுதி அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணியின் நினைவாக, பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
  • முகாமில் பரமத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி கோட்டை அரிமா சங்கம் மற்றும் கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து கபிலர்மலை தொகுதி அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணியின் நினைவாக, பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு பரமத்தி கோட்டை அரிமா சங்க தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். அரிமா சங்க அறக்கட்டளை தலைவர் ராகா ஆயில் தமிழ்மணி வரவேற்றார். பரமத்தி அ.தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். முகாமினை குமாரபாளையம் தங்கமணி எம்.எல்.ஏ, பரமத்தி வேலூர் சேகர் எம்.எல்.ஏ, அரிமா சங்கம் முன்னாள் பன்னாட்டு இயக்குனர் தனபாலன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.

முகாமில் பரமத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் பரமத்தி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திலகவதி வெற்றிவேல், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ஜே.பி.ரவி, பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி, பரமத்தி நகர செயலாளர் சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News