காந்தி-கலாம் பிறந்தநாளையொட்டி நடைபயணம் மேற்கொள்ளும் மதுரை தியாகிக்கு தருமபுரியில் வரவேற்பு
- பிரசார பயணம் மற்றும் பாத யாத்திரைகள் மேற்கொண்டுள்ளார்.
- ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு சென்று தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.
தருமபுரி,
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 53). சுதந்திர போராட்ட தியாகியான இவர் தேச நலனுக்காக இதுவரை சுமார் 97 ஆயிரத்து 700 கிலோமீட்டர் மிதிவண்டி பிரசார பயணம் மற்றும் பாத யாத்திரைகள் மேற்கொண்டுள்ளார்.
கடந்த முறை தனது மனைவி சித்ராவுடன் பிரசார யாத்திரை மேற்கொண்டபோது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்தார். ஆந்திர போலீசார் அரசு மரியாதையுடன் சித்ராவின் உடலை அடக்கம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 15-ந்தேதி பெங்களூருவிலிருந்து தனது பயணத்தை தொடங்கிய கருப்பையா அங்கிருந்து ஓசூர்,கிருஷ்ணகிரி வழியாக இன்று தருமபுரி வந்தார். அவருக்கு இங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இங்கிருந்து புறப்படும் கருப்பையா சேலம்,நாமக்கல் வழியாக புதுச்சேரி செல்கிறார்.பின்னர் அங்கிருந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு சென்று தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.