உள்ளூர் செய்திகள்
- கணவர் அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது.
- வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து ெகாண்டார்.
நீடாமங்கலம்:
ஆடுதுறை தெற்கு அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ராஜகுரு. இவரது மனைவி இந்துமதி (வயது 24). இத்தம்பதிகளுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. 9 மாத ஆண் குழந்தை உள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக தனியாக வசித்து வந்த நிலையில் ராஜகுரு அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டு இந்துமதி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு ராஜகுரு அழைத்து வந்துள்ளார். இதனிடையே இந்துமதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்தார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.