உள்ளூர் செய்திகள்

ஞானவிநாயகருக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

ஞானவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-10-28 14:52 IST   |   Update On 2023-10-28 14:52:00 IST
  • கோபுர கலசம் மற்றும் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை தருமபுரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்து ள்ளது. ஆதீன தென்மேற்கு மூலையில் முற்றிலும் கருங்கல்லால் செய்யப்பட்ட பீடத்தில் ஒன்றரை டன் எடையுள்ள ஞான விநாயகர் புதிதாக அமைக்க ப்பட்டுள்ளது.

இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெ ற்றது. இதனை முன்னிட்டு திருக்கடையூர் மகேஸ் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நான்கு கால யாகசாலை பூஜைகளை நேற்று முன் தினம் தொ டங்கினர்.

யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கடங்கள் எடுத்து வரப்பட்டு மேளதாளங்கள் உள்ளிட்ட மங்கள வாத்தியங்கள் முழங்க கோபுர கலசம் மற்றும் விநாயகர் ஆகியோருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கும்பா பிஷேகம் நடைபெற்றது .

தருமபுரம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சா ரியார் சுவாமிகள் முன்னி லையில் நடைபெற்ற கும்பா பிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News