உள்ளூர் செய்திகள்
அரசு கல்லூரி மாணவர்கள் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி
- பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
- சப்- இன்ஸ்பெக்டர் சின்னப்பன் முன்னிலை வகித்தார்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவ -மாணவிகள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குருக்கபரம் ஊராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் பங்காரு பேரணியை தொடங்கி வைத்தார். போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சின்னப்பன் முன்னிலை வகித்தார். அப்போது மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை விளக்கியும், துணி பையை பயன்படுத்த அறிவுரையும் கூறினர். அப்போது நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவ லர்கள் பிரபாகரன், இந்திராணி, கிருபாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.