உள்ளூர் செய்திகள்

மாதம்பதி பகுதியில் கிராம சபை கூட்டம்

Published On 2023-08-16 09:50 GMT   |   Update On 2023-08-16 09:50 GMT
  • சுற்றுபுற பகுதிகளை சுகாதார முறையில் வைத்து கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  • கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்றத் தலைவர் சந்தோஷ் குமாரிடம் பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், ஒட்டப்பட்டி ஊராட்சி மாதம்பதி அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் சுதந்திர தின கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழக அரசு வழங்கும் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் உரிய ஆவணங்கள் கொடுத்து பயன்பெருதல், இளம் வயது திருமணத்தை தடுத்து நிறுத்துதல், பெண் கல்வியின் அவசியம் குறித்தும், வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள குடும்பங்களை கண்டறிந்து பட்டியலில் சேர்த்தல், இடை நின்ற மாணவர்களை மீண்டும் கல்வியை தொடர ஊக்குவித்தல், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் அரசு வழங்கும் மானியத்தை பயன்பன்படுத்தி கொள்ளுதல் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ளுதல், சுற்றுபுற பகுதிகளை சுகாதார முறையில் வைத்து கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டடன.

இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்றத் தலைவர் சந்தோஷ் குமாரிடம் பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

கூட்டத்தில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கலைமணி சுரேஷ், மற்றும் வார்டு உறுப்பினர்கள் கல்வித்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, மீன்வளத் துறை, தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், பொது–மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் ராஜாமணி செய்திருந்தார்.

Similar News