ராசிபுரத்தில் அரசியல் கட்சியினர் அரை நிர்வாண போராட்டம்
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 80-க்கும் மேற்பட்ட நிரந்தர தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
- பொங்கல் போனஸ் மற்றும் சீருடை வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு அரசியல் கட்சியினர், கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுத்து, அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 80-க்கும் மேற்பட்ட நிரந்தர தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் சீருடை வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு அரசியல் கட்சியினர், கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுத்து, அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.
முன்னதாக நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு பொதுமக்களிடம் இருந்து பிச்சை எடுத்து நகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தி
னர். இதில் நாமக்கல் மாவட்ட
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செய
லாளர் நீல வானத்து நிலவன் தலைமை தாங்கினார்.
ராசிபுரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் செங்குட்டுவன், கொங்கு நாடு தேவேந்திர குல மக்கள் பேரவை நிறுவனத் தலைவர் முனியப்பன், தமிழக வாழ்வுரிமை கட்சி நகரச் செயலாளர் செல்வேந்திரன், அருந்ததியர் மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ரஜினி ராமசாமி, தமிழ் புலிகள் கட்சி மேற்கு மண்டல பொறுப்பாளர் அறிவு ஆகியோர் கலந்து கொண்டனர்.