சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
- சீர்காழியில் 2.8 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது.
- கழிவுநீர் வடிகால் அமைத்து கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீர்காழி:
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இரண்டு நாட்கள் லேசான முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் சட்டநாதபுரம் கொள்ளிடம் திருமுல்லைவாசல் திருவெண்காடு பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சீர்காழியில் 2.8 சென்டிமீட்டர் மழையும் கொள்ளிடத்தில் 2.46 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் பகுதி சாலைகளில் குளம்போல் தேங்கி கிடக்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாகவே இயக்கி வருகின்றனர்.
மேலும் வைத்தீஸ்வரன் கோவில் நகர் பகுதிகளில் கழிவுநீருடன் மழை நீர் கலந்து சாலைகளில் தேங்கிக் கிடப்பதால் நோய் தொற்று ஏற்படும் எனவும் முறையான கழிவுநீர் வடிகால் அமைத்து கழிவுநீரை வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.