உள்ளூர் செய்திகள்

தாளவாடி அருகே முகாமிட்டுள்ள யானை கூட்டங்கள்: வனத்துறையினர் கண்காணிப்பு

Published On 2025-01-27 11:35 IST   |   Update On 2025-01-27 11:35:00 IST
  • தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
  • 15-க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் நிலத்தில் சுற்றி திரிந்துள்ளது.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வன சரத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.

சமீப காலமாக கர்நாடகாவில் இருந்து இடம்பெயர்ந்து தாளவாடி அருகே வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட அருள்வாடி கிராமத்திற்கு கர்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 15-க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் அருள்வாடி கிராமம் அருகே உள்ள மானாவாரி நிலத்தில் சுற்றி திரிந்துள்ளது.

இதனால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் அச்சம் அடைந்தனர். யானை கூட்டங்கள் விவசாய நிலத்தில் அல்லது ஊருக்குள் புகுந்தால் அதிக சேதாரம் ஏற்படும் என்பதால் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானைக் கூட்டங்கள் அருள்வாடி கிராமத்திற்குள் புகாதவாறு கண்காணித்து வருகின்றனர். மேலும் யானைக் கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News