உள்ளூர் செய்திகள்

திண்டிவனத்தில்கூலித் தொழிலாளி ஏ.டி.எம். கார்டு மூலம் கொள்ளையடித்த டிப்டாப் ஆசாமி

Published On 2023-01-31 13:41 IST   |   Update On 2023-01-31 13:41:00 IST
  • அருள் (வயது 44) கூலி தொழிலாளி. பணம் எடுக்க வந்தார்,.
  • ப்டாப் ஆசாமியிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து கார்டு ரகசிய நம்பரையும் கூறி பணம் எடுத்து தருமாறு கேட்டுள்ளார்

விழுப்புரம்:

திண்டிவனம் நேரு வீதியில் அரசுக்கு சொந்த மான ஏடிஎம் உள்ளது. இந்த ஏ.டிஎம். மையத்துக்கு நேற்று மாலை கொள்ளார் காட்ராம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அருள் (வயது 44) கூலி தொழிலாளி. பணம் எடுக்க வந்தார். இந்நிலையில் அருளுக்கு ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுக்க தெரியாததால் அருகில் இருந்த டிப்டாப் ஆசாமியிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து கார்டு ரகசிய நம்பரையும் கூறி பணம் எடுத்து தருமாறு கேட்டுள்ளார்   இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட டிப்டாப் ஆசாமி அருள் ஏடிஎம் கார்டை மறைத்து வைத்துவிட்டு அதற்கு மாறாக அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டை அவரிடம் கொடுத்து பணம் இல்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்  பின்னர் ஏ.டி.எம். கார்டை திருடி சென்ற டிப் டாப் ஆசாமி வேறொரு ஏடிஎம் சென்று பணத்தை நூதகமாக திருடி சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அருள் செல்போனிற்கு உங்கள் வங்கியில் இருந்து ரூ.30000 பணம் எடுக்கப்பட்டுள்ளது என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதை பார்த்த அதிர்ச்சடைந்த அருள் இது குறித்து திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து கூலித்தொழிலாளியிடம் இருந்து நூதனமாக திருடி சென்ற டிப் டாப் ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News