உள்ளூர் செய்திகள்

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.62.44 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள்

Published On 2022-09-11 15:09 IST   |   Update On 2022-09-11 15:09:00 IST
  • வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணி என மொத்தம் ரூ.62.44 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள்நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
  • அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மொரப்பூர்,

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளரச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொப்பம்பட்டி ஊரா ட்சியில் தொப்பம்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்போர் அறை கட்டும்பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.

தசராஅள்ளி ஊராட்சி போடிநாயக்கன்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பின் மகளிர் சுயஉதவி க்குழு வினரின் பயன்பாட்டி ற்கான கட்டடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டார்.

இதே ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தி ட்டத்தின்கீழ் ரூ.4.77 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணி என மொத்தம் ரூ.62.44 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள்நடைபெற்று வருவதையும் மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது நேர்முக உதவியாளர் வளர்ச்சி மரியாம் ரெஜினா, ஒன்றிய குழு தலைவர் இ.டி.டி. சுமதி செங்கண்ணன், துணை தலைவர் சி. வன்னிய பெருமாள் மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி. ரவிச்சந்திரன்,வி.பி.ரவிச்சந்திரன், ஒன்றிய பொறியாளர் பழனியம்மாள், உதவி பொறியாளர் அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சரிதா ராஜி, தமிழ்ச்செல்வி ரங்கநாதன், கவிதா செந்தில்குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் செல்வி சின்னப்பையன், வெங்கடேசன், ஊராட்சி செயலாளர்கள் சண்முகம், ராமதாஸ், கிருஷ்ணன், அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News