உள்ளூர் செய்திகள்

ரிஷிவந்தியத்தில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளை

Published On 2023-01-28 07:56 GMT   |   Update On 2023-01-28 09:29 GMT
  • வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார்.
  • வீட்டின் அறை கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன் பர்னபாஸ் (வயது 66). ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரான இவா் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்துபர்னபாஸ் குடும்பத்தினருடன் ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் மாடியில் வசித்து வரும் அவரது மகன் விஜய் இருதயராஜ் வீட்டின் அறை கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நெக்லஸ், வளையல், தோடு உள்ளிட்ட 13 பவுன் நகைகளை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் என கூறப்படுகிறது.      இது குறித்து பர்னபாஸ் கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீ்ட்டில் புகுந்து மர்ம நபர்கள் 13 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படு த்தியுள்ளது.

Tags:    

Similar News