உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு நடைப்பயணத்தை மேயர் சண்.ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தஞ்சையில், இன்று உயர் ரத்த அழுத்த தின விழிப்புணர்வு நடைபயணம்- மேயர் தொடங்கி வைத்தார்

Published On 2023-05-21 14:45 IST   |   Update On 2023-05-21 14:45:00 IST
  • நடைப்பயணத்தால் உடலுக்கு ஏற்படும் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
  • இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

தஞ்சாவூர்:

உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பு களைப் பற்றி விழிப்பு ணர்வை ஏற்படுத்துவ தற்காக உலக இரத்த அழுத்த தினம் ஆண்டு தோறும் மே 17-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் சார்பாக ரத்த அழுத்த விழிப்புணர்வு நடைபயணம் இன்று நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டரின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.கே.இனியன், மருத்துவமனையின் மூத்த நிர்வாக அதிகாரி டாக்டர் எஸ்.ரமேஷ்பாபு, டாக்டர் அக்சயா இனியன், டாக்டர் கே.மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முன்பு இருந்து தொடங்கிய நடைபயணத்மாதை நகராட்சி மேயர் சண்.ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் பொதுமக்கள், மாணவர்கள், டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நடைப்பயணமாக புறப்பட்டனர்.

அப்போது நடைப்பயணத்தின் அவசியம் குறித்தும், நடைப்பயணத்தால் உடலுக்கு ஏற்படும் பயன்கள் குறித்தும், உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள், அதை எவ்வாறு குணப்படுத்துவது (அல்லது) வாழ்கை முறையினால் கட்டுப்படுத்துவது போன்றவை குறித்து பொது மக்களுக்கு தெளிவாக விளக்கி கூறப்பட்டது.

இந்த நடைப்பயண மானது தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் வழியாக சுமார் 3 கி.மீ. சென்று மீண்டும் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி நுழைவு வாயிலில் முடிவடைந்தது.

நடைப்பயணத்தில் பங்கேற்ற அனைவரும் உயர் இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாடாக வைக்கப்படும் என்ற எடுத்துக் கொண்டனர்.

நடைப்பயணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

முன்னதாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேயர் சண்.ராமநாதனுக்கு, ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டரின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.கே. இனியன் நினைவு பரிசு வழங்கினார்.

Tags:    

Similar News