உள்ளூர் செய்திகள்

தெப்பத்திருவிழா நடந்தபோது எடுத்தபடம்

திருச்செங்கோட்டில் 51 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தெப்பத்திருவிழா

Published On 2022-11-12 13:15 IST   |   Update On 2022-11-12 13:15:00 IST
  • கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தெப்ப தேர் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு தெப்பதிருவிழா கோலாகலமாக நடந்தது.
  • மாரியம்மன் திருவிழா கடந்த 1-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் அர்த்த நாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கிருஷ்ண தேவராயர் காலத்தில் உருவாக்கப்பட்ட நகராட்சியால் நிர்வாகிக்கப்படும் பெரிய தெப்பக்குளம் உள்ளது. இங்கு பாரம்பரியமாக மாரியம்மன் திருவிழாவின் போது தெப்ப தேர் ஓட்டுவது வழக்கம்.

கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தெப்ப தேர் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு தெப்பதிருவிழா கோலாகலமாக நடந்தது. மாரியம்மன் திருவிழா கடந்த 1-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

இதை தொடர்ந்து நேற்று மாலை தெப்ப திருவிழா நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங், டி.எஸ்.பி. மகாலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா, மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, நகராட்சி ஆணையாளர் கணேசன், அர்த்நாரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன், ஊர்கவுண்டர் ராஜா, மாரியம்மன் கோவில் முக்கியஸ்தர் முத்துகணபதி, தீயணைப்பு துறை அலுவலர் குணசேகரன், தாசில்தார் அப்பன் ராஜ் ஆகியோர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அலங்கரிக்கபட்ட தெப்பதேரில் பெரிமாரி யம்மன், சின்னமாரியம்மன், அழகு முத்து மாரியம்மன் எழுந்தருளிய பின் சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டு தெப்பத் தேர் வடம் பிடிக்கப்பட்டது. கிழக்கு கரையில் இருந்து மேற்கு கரை சென்ற தெப்பத்தேரில் பவனிவந்த அம்மன்களுக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது.

தொடர்ந்து நடுகுளப் பகுதிக்கு வந்த தேருக்கு 4 திசைகளிலும் ஆராதனை செய்யப்பட்டு கிழக்கு கரையில் நிலை சேர்க்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பின் நடந்த தெப்பதிருவிழாவைக் காண்பதில் ஆச்சரியமும் பிரமிப்பும் ஏற்படுவதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News