உள்ளூர் செய்திகள்
உளுந்தூர்பேட்டை பகுதியில் பா.ம.க. கொடி ஏற்று விழா
- உளுந்தூர்பேட்டை பகுதியில் பா.ம.க. கொடி ஏற்று விழா நடைபெற்றது.
- தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் அந்த நிர்வாகிகளுடன் கலந்து கொடியேற்று விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்க முழுவதும் பா.ம.க. 34-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது/ இதை முன்னிட்டு பாண்டூர் பஸ்நிலையத்தில் மாவட்ட தலைவர் தமிழ்வாணன் தலைமையில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினர். இதுபோல் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் அந்த நிர்வாகிகளுடன் கலந்து கொடியேற்று விழா நடந்தது. இதில் முன்னாள் நிர்வாகிகள் பாண்டுர் பாண்டியன், மணிராஜ், ஜெயக்குமார், பாலாஜி, கோவிந்தராஜ், அறிவழகன், பாலகிருஷ்ணன், ராஜேந்திரன், கார்த்திக், தனபால் மற்றும் பலர் பங்கேற்றனர்.