உள்ளூர் செய்திகள்
ஊத்துக்குளியில் மாஞ்சோலை கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா
- கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான கட்டிட வேலைகளை கோவில் நிர்வா கிகள் செய்து வந்தனர்.
- 10ஆயிரம் பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்பட்டது.
ஊத்துக்குளி :
ஊத்துக்குளி, ரெட்டிபாளையத்தில் மாஞ்சோலை கருப்பராயன் கன்னிமார் கோவில் உள்ளது. பல வருடங்களாக கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான கட்டிட வேலைகளை கோவில் நிர்வாகிகள் செய்து வந்தனர். இதையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்துக்கு முன்னதாக ஆகம விதிகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு சுவாமிகளுக்கும் தனியாக யாக குண்டம் வளர்த்து ஹோமங்கள் நடைபெற்றது. கடந்த 3 நாட்களாக விக்னேஸ்வர பூஜை, தீர்த்த குடம் எடுத்தல் ,நான்காம் கால பூஜை, மகாதீப ஆராதனை நடைபெற்றது. நேற்று காலை கருப்பராயன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் 10ஆயிரம் பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை வேலவன் கலைக்குழுவின் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது.