உள்ளூர் செய்திகள்
கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வேதாரண்யத்தில், கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
- பேராயர் ஆர்தர் செல்லராஜா தலைமையில் பிரார்த்தனை.
- ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகளை வழங்கல்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி மோட்டாண்டிதோப்பில் உள்ள சீயோன் பிரார்த்தனை மையத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில் சபை போதகர் குணசேகரன் அனைவரையும் வரவேற்றார். நாகை சீயோன் பேராலய தலைமை பேராயர் ஆர்தர் செல்லராஜா தலைமையில் பிரார்த்தனை நடைபெற்றது. விழாவில் வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகளை வழங்கினர்.
முடிவில் சின்னசாமி நன்றி கூறினார். விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.